ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபுஃபுகோகா
புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள் கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும்.
அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.
“ஜப்பான் நாட்டில் பிறந்த ஒரு மகான்.சொந்த அனுபவங்களும் அவரின் பார்வையும் .படித்த பின்பு சொல்ல முடியாத அளவு மன ஓட்டங்கள்.இதனை படித்து அதிகம் பேர் இயற்கை விவசாயம் மேல் காதலும் ,பெரம்பும் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் முயன்றும் ,செய்தும் வருவது காண கிடைக்கும் விடயம். இந்த புத்தகத்தை பல முறை படித்தாலும் அலுக்காத ஒன்று .”
புதிதாய் விவசாயம் செய்ய வருபவர்கள் “இயற்கை வேளாண்மை” என்பதற்கு, இயற்கை நமது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் விதை விதைத்து விட்டு சற்றுத் தள்ளி நன்று பயிர் வளர்ச்சியை வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணி கொள்வர்களுக்கு ,மசானபுஃபுகோகா அவர்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் மிக மிக பெருமளவில் உள்ளது என்பதைஇந்த நூலில் மூலம் கற்றுக் கொடுப்பார்.
Social Plugin